பிரிட்டனின் Downing Street வாயிலை கார் மோதியது – ஒருவர் கைது!

Loading… பிரித்தானிய பிரதமரின் அலுவலகம் அமைந்துள்ள டவுனிங் வீதி (Downing Street) வாயில் மீது கார் ஒன்று மோதியதனை அடுத்து அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் காரை செலுத்தியவர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். பாரிய சேதம் விளைவித்தல், மற்றும் ஆபத்தாக வாகனம் ஓட்டியமை குறித்த சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார், எனினும் இந்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக கருதப்படவில்லை என பெருநகர பொலிசார் (Met Police) தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. … Continue reading பிரிட்டனின் Downing Street வாயிலை கார் மோதியது – ஒருவர் கைது!